skip to main
|
skip to sidebar
திறக்காத காட்டுக்குள்ளே....
மனம் என்னும் திறக்காத காட்டுக்குள் புதைந்து கிடப்பவைகள் தான் இங்கே சமர்ப்பிக்கப்படுகின்றன.
Saturday, June 20, 2009
சந்திக்கும் வேளைகளில்...
நாம் சந்திக்கும்
வேளைகளில்..
அளவாய் பேச
கற்றுக்கொள்!!!
கொஞ்சமாய்
அக்கரைக்காட்டு!!!
குறிப்பேடுகளில்
எழுதுவதற்கு
பக்கங்கள்
போதுவதில்லை!!!
Friday, June 12, 2009
நீ விடுவதில்லை
என் தனிமையிலும்
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!
சந்திப்பு
நினைத்துக்கொள்வதென்பது
ஒரு வகை சந்திப்பாம்!!!
அப்படியென்றால்,
எந்த கணக்கில் சேர்ப்பது
நம் சந்திப்புகளை!!!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
சிந்திக்கின்றேனே உன்னை!!!
Thursday, June 11, 2009
கடிதம்
எங்கிருந்து கிடைக்கிறது
வார்த்தைகள்
உனக்கு மட்டும்?!?!
உனக்கு மட்டுமே
சொந்தமான வார்த்தைகளில்
எனக்கு கடிதம்.
அதை படிக்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
நட்பு !!!
நமக்கு மட்டுமே
சொந்தம் என்று!!!
Sunday, May 31, 2009
சாகா வரம்
யாரிடம்
பெற்றுவந்ததோ
சாகா வரம்?
எப்பொழுதும்
துடிப்புடன்...
என் இதயத்தில்..
உன் நினைவுகள்!!!
Thursday, April 23, 2009
தனிமையும் நானும்
இருக மூடி
விழி திறந்து
பார்த்தால்
பழக்கமாகி விடும்
இருட்டைப்போல
பழக்கமாகிவிட்டது
தனிமையும் எனக்கு...
இந்த தனிமையின்
பிடிப்பு
என்னிடமிருந்து
உன்னை
பிரித்துவிடுமோ
என்று தான்
வருந்துகிறேன்.
இந்த பழக்கம் எனக்கு
பழக்கமாகிவிடுவதற்குள்
உறவுக்குள் செல்வோமா???
காலத்தின் சம்மதத்தோடு
நம்மை
காத்திருந்தவர்களின்
சம்மதத்தோடு!!!???
ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...
”உன்னை அழைக்கமாட்டேன்”
என்று சொல்லி
அழைப்பதே
என் வழக்கம்.
”உன்னை அழைக்கிறேன்”
என்று சொல்லி
அழைக்காமல் போவதே
உன் பழக்கம்
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
▼
2012
(2)
▼
March
(1)
ஒ! இது அவனே தான்!
►
February
(1)
►
2011
(6)
►
September
(2)
►
June
(4)
►
2010
(1)
►
July
(1)
►
2009
(11)
►
June
(4)
►
May
(1)
►
April
(6)
About Me
Nisha
View my complete profile