Thursday, April 23, 2009

தனிமையும் நானும்


இருக மூடி
விழி திறந்து
பார்த்தால்
பழக்கமாகி விடும்
இருட்டைப்போல
பழக்கமாகிவிட்டது
தனிமையும் எனக்கு...

இந்த தனிமையின்
பிடிப்பு
என்னிடமிருந்து
உன்னை
பிரித்துவிடுமோ
என்று தான்
வருந்துகிறேன்.

இந்த பழக்கம் எனக்கு
பழக்கமாகிவிடுவதற்குள்
உறவுக்குள் செல்வோமா???
காலத்தின் சம்மதத்தோடு
நம்மை
காத்திருந்தவர்களின்
சம்மதத்தோடு!!!???

ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...



”உன்னை அழைக்கமாட்டேன்”
என்று சொல்லி
அழைப்பதே
என் வழக்கம்.
”உன்னை அழைக்கிறேன்”
என்று சொல்லி
அழைக்காமல் போவதே
உன் பழக்கம்.

குரல் நீர்


 
 
வறண்டு போன
தரிசுநிலமாய்
இருந்த என் இதயம்
இன்று
விளைநிலமாய் ...
சந்தோஷப்பயிர்கள்
அசுர வேகத்தில்
வளர்ந்து
வானைமுட்டும்
உயரத்தில்...
அட!
உன் குரல்நீரை
பாய்ச்சியதற்கு
இத்தனை விளைவுகளா???

தனிமை



தனிமையின்
தீத்துளிகள்
என்னை
தீண்டும்
போதெல்லாம்
அதையனைக்க
அவசரமாய்
நீ(ர்) வேண்டும்

Sunday, April 19, 2009

உன்னாலே உன்னாலே..



குழந்தைப்பருவத்திற்கு போக
அனைவருக்கும் ஆசை தான்!
ஏனோ அந்த ஆசை
தோன்றவேயில்லை எனக்கு!
குழந்தையாகவே நீ என்னை
பார்த்துக்கொள்வதாலா!!!????

கடைசியாய்...









என் முன்னுரையே
ஒ௫ முடிவுரையை
பற்றியது….

என் முதல்புள்ளியே
ஒ௫ முற்றுப்புள்ளியை
பற்றியது…

இவை கவிதைகள் அல்ல!!!
என் கண்ணீர் துளிகள்.
மடிந்து போன ஒ௫ உறவுக்காக
நான் மனதால் செலுத்திய
மலர் வளையங்கள் !!!
*
அண்ணா!
ஒரே ஒரு கவிதை
கேட்டேன்
கூற மறுத்தாய்

இதோ..
உனக்காக அடுக்கடுக்காய்
கவிதைகள்
ஆனால்,
கேட்கவும் மறுக்கிறாயே!
*
நினைவுகள்
ஓவ்வொன்றும்
சிறு தீப்பொறியாய்
என் மனசே
ஒரு எரிமலையாய்
ஏன் இறந்தாய்???
*
நீ
இறந்து போனதை..
மௌனமாய் உறங்கியதை..
கண் கூடாய்
பார்க்காதவரை

உறவே!
நீ உயிருடன் தான்
இருக்கிறாய்
என் உணர்வுகளுக்குள்..

*
உன் இழப்பிற்குப்ப்பின்
குழந்தைகள் விளையாடும்
விளையாட்டு வாகனங்களின்
பொய்யான விபத்துகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை
என் மனதால்..
*
இறந்தவன்
அமைதியாய்
உறங்குகிறான்

இருக்கிறவர்கள்
கதறி கதறி
அழுகிறார்கள்

அந்த சத்தத்திலாவது
அவன்
விழிக்க மாட்டானா???