Showing posts with label கடைசியாய்.... Show all posts
Showing posts with label கடைசியாய்.... Show all posts

Sunday, April 19, 2009

கடைசியாய்...









என் முன்னுரையே
ஒ௫ முடிவுரையை
பற்றியது….

என் முதல்புள்ளியே
ஒ௫ முற்றுப்புள்ளியை
பற்றியது…

இவை கவிதைகள் அல்ல!!!
என் கண்ணீர் துளிகள்.
மடிந்து போன ஒ௫ உறவுக்காக
நான் மனதால் செலுத்திய
மலர் வளையங்கள் !!!
*
அண்ணா!
ஒரே ஒரு கவிதை
கேட்டேன்
கூற மறுத்தாய்

இதோ..
உனக்காக அடுக்கடுக்காய்
கவிதைகள்
ஆனால்,
கேட்கவும் மறுக்கிறாயே!
*
நினைவுகள்
ஓவ்வொன்றும்
சிறு தீப்பொறியாய்
என் மனசே
ஒரு எரிமலையாய்
ஏன் இறந்தாய்???
*
நீ
இறந்து போனதை..
மௌனமாய் உறங்கியதை..
கண் கூடாய்
பார்க்காதவரை

உறவே!
நீ உயிருடன் தான்
இருக்கிறாய்
என் உணர்வுகளுக்குள்..

*
உன் இழப்பிற்குப்ப்பின்
குழந்தைகள் விளையாடும்
விளையாட்டு வாகனங்களின்
பொய்யான விபத்துகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை
என் மனதால்..
*
இறந்தவன்
அமைதியாய்
உறங்குகிறான்

இருக்கிறவர்கள்
கதறி கதறி
அழுகிறார்கள்

அந்த சத்தத்திலாவது
அவன்
விழிக்க மாட்டானா???