என் இனிய தோழியே ! நீ என்
இல்லம் வராமலே இருந்திருக்கலாம்!!!
உன் இனிய குரலால்
என்னை அழையாமலே இருந்திருக்கலாம்!!!
அரைமணி, ஒருமணி என்று
உன்னுடன் அமர்த்தாமல் இருந்திருக்கலாம்!!!
என் கண்ணீர், கவலை, கவிதை என்று
அத்தனையும் கேட்காமல் இருந்திருக்கலாம்!!!
என் கவலைகளின் உடனடி ஆறுதல்
என் களிப்புகளின் உடனடி பகிர்தல்
இவைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம்!!!
உன்னை நெருங்கியதன் விளைவாய்
பார் எத்தனை பெரிய பிரிவு நமக்குள்!!!
இனிய குரல்களை என் செவிக்கு உணவாக்கிவிட்டு
இப்போது ஏன் ஊமையாகிப்போனாய்???
என்னை ஏன் ஊமையாக்கிப்போனாய்???
"கண்மூடித்தனமான அன்பு கண்ணைக் கெடுக்குமாம்"
இனி நாம் அளவாய் வைத்துக்கொள்வோம்
என் தோழி "தொலைபேசி" யே எல்லாம் நம் நட்பிற்காக!!!
Friday, June 17, 2011
Friday, July 2, 2010
மனமே சிறை ...
Saturday, June 20, 2009
சந்திக்கும் வேளைகளில்...
Friday, June 12, 2009
சந்திப்பு

நினைத்துக்கொள்வதென்பது
ஒரு வகை சந்திப்பாம்!!!
அப்படியென்றால்,
எந்த கணக்கில் சேர்ப்பது
நம் சந்திப்புகளை!!!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
சிந்திக்கின்றேனே உன்னை!!!
ஒரு வகை சந்திப்பாம்!!!
அப்படியென்றால்,
எந்த கணக்கில் சேர்ப்பது
நம் சந்திப்புகளை!!!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
சிந்திக்கின்றேனே உன்னை!!!
Thursday, June 11, 2009
கடிதம்

எங்கிருந்து கிடைக்கிறது
வார்த்தைகள்
உனக்கு மட்டும்?!?!
உனக்கு மட்டுமே
சொந்தமான வார்த்தைகளில்
எனக்கு கடிதம்.
அதை படிக்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
நட்பு !!!
நமக்கு மட்டுமே
சொந்தம் என்று!!!
வார்த்தைகள்
உனக்கு மட்டும்?!?!
உனக்கு மட்டுமே
சொந்தமான வார்த்தைகளில்
எனக்கு கடிதம்.
அதை படிக்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
நட்பு !!!
நமக்கு மட்டுமே
சொந்தம் என்று!!!
Sunday, May 31, 2009
Subscribe to:
Posts (Atom)




