
மனிதன்,
தன்னைத்தானே
தன்னிடமிருந்தே
விடுவித்துக்கொள்ளும்
நொடிவரையில்
விடுதலையின்
அர்த்தத்தை
உணரப்போவதில்லை
அகத்தூய்மை மட்டுமே
ஒரு மனிதனை
அழகாக்க முடியும்
அமைதியாக்க முடியும்
அகவிடுதலையை
விதைத்தால் மட்டுமே
இந்த உலகமிதில்
அறச்செடிகள் வளரக்கூடும்
இல்லையேல்,
இவ்வுலகம் கலவரம்
கண்டு கண்டே
காணாமல் போகும்